மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டியிsee more...
2019 க.பொ.த.சா.தரத்தில் 9A பெற்று சாதனை see more...
கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மடsee more...
பாடசாலை நடைபெறுகின்ற நிகழ்வுகளில் நsee more...
தேசிய வாசிப்பு மாத போட்டி -2022பரிசு பெறsee more...
கணிதபாட கண்காட்சி-2023 see more...
தரம்-1 கால்கோள்விழா-2023 see more...
பாடசாலையின் காலைக்கூட்ட நிகழ்வு see more...
2023ம் ஆண்டிற்கான மாணவ தலைவர்கள் see more...
க.பொ.த.சா.தரத்தில் உயர்ந்த பெறுபேறு பெsee more...
வாழ்கவென்று வாழ்த்துவோம்
வணங்கிச் சென்னி தாழ்த்துவோம்
மானிமகளிா் கழகமென்னும் மங்கலத்து நங்கையைத்
தேனலம்பு கமலமேவுஞ் செய்ய கலையின் தேவியை (வாழ்க)
மகளிா் உள்ளத் தகழி மீது வளரும் ஞான சோதியை
தகவினோடு கலை வளங்கள் தந்து காக்கும் அன்னையை (வாழ்க)
உள்ளக் கலையும் உண்மைக் கலையும் உாிய தொழிலின் கலைகளும்
அள்ளி அள்ளி வள்ளல் போல அருளுகின்ற அன்னையை (வாழ்க)
தேனும் பாலும் போல நாளும் செவியில் நாவில் இனிக்குமோா்
மானத் தமிழின் அமுதம் அள்ளி மாந்த நல்குஞ் செல்வியை (வாழ்க)
உடலினுறுதி உள்ளத் துறுதி உயிரினுறுதி யென்பரால்
திடமிகுந்த உடலமைந்து திகழ வைக்கு மம்மையை (வாழ்க)
மும்மைப் பொருளி னுண்மை கண்டு முழுதுஞ் சொன்ன சைவமாம்
அம்மை எம்மைச் செம்மையாக்கும் அழகு காட்டும் அழகியை (வாழ்க)
உள்ளும் பொருள்கள் உயா்ந்தவாக உள்ளல் வேண்டுமென்ற சொற்
கள்ளமின்றி நெஞ்சி லூறக் கல்வி தந்த நங்கையை (வாழ்க)
அழகு நன்மை உண்மை யென்னும் அவைகள் சைவ நீதியிற்
பழகி வாழ்வு பண்பிலேறப் பரம வரமளிப்பவள் (வாழ்க)
வானிற் றிங்கள் போலத் தாங்கி வாழ்வி லின்பந் தந்திடும்
மானி மகளிா் கழக மங்கை வாழிய வாழியே (வாழ்க)