பாடசாலை அதிபரின் செய்தி 



மானியம்பதியில் புகழ் பூத்து தலை நிமிர்ந்து கொண்டு ஆளுமை மிக்க மகளிரை சமுகத்துக்குத் தந்து கொண்டிருக்கும் யா/மானிப்பாய் மகளிர் கல்லூரியின் இணையத் தளத்தினை ஆரம்பித்து வைப்பதில்; நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். எதிர்கால சமூகத்துக்கு சிறந்த மகளிர் தலைவர்களையும் முன்மாதிரியான வீரப்பெண்மணி;களையும உருவாக்குவதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் எமது கல்லூரியின் ஆற்றல் மிகு மாணவர்களின் பாட இணைப்பாடவிதான சாதனைகளும், பாடசாலையில் நடைபெறும் பல்வேறு செயற்பாடுகளும் உத்தியோக பூர்வமாக அனைவரையும் சென்றடையக்கூடியதாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது பாடசாலையின் உத்தியோகபூர்வமற்ற செய்திகளை புறக்கணிக்கவும், தேவையற்ற செய்திகளினால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவும் இவ் இணையத்தளம் உதவுகின்றது.
எமது மானி மகளிரின் செய்திகளை ஒழிவு மறைவின்றி இன்றி உடனுக்குடன் வெளிப்படுத்தவும் கல்லூரியி;ன் வளர்ச்சியை முன்னேற்றமடையச் செய்வதற்கு தொடர்ந்து உதவி வழங்குபவர்கள் பற்றிய விபரங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வழி வகைகளை இந்த இணையத்தளத்தின் ஊடாக ஏற்படுத்தியுள்ளேன்.

மானி மகளிர் அன்னையின் பெருமையைப் பறை சாற்றிக்கொண்டிருக்கும் பழைய மாணவர் அனைவரும் இவ் இணையத்தளத்தின் ஊடாக ஒன்றிணைய வேண்டும் என்பதையும் எதிர்பார்த்து நிற்கின்றேன் 
அதிபர்

திருமதி.சுனித்திரா சூரியராஜா

S.L.P.S 2

NDIP in teaching

BA,PGD.Med, DSM